சேஹோர்: மத்திய பிரதேசத்தில் போர்வெல் குழியில் சிக்கிய சிறுமியை மீட்கும் பணியில், இரவு பகலாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம், சேஹோர் மாவட்டம் முங்காவலி கிராமத்தை சேர்ந்த ராகுல் குஷ்வாஹா என்பவரின் இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி, அப்பகுதியில் இருந்த வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தவறி விழுந்தாள். அதைப் பார்த்த அப்பகுதியினர், ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தவறி விழுந்தது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புக் குழுவுடன் வந்து.
300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருந்ததால், அவரை மீட்பதற்காக 4 ஜேசிபி மற்றும் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணற்றின் ஓரத்தில் மற்றொரு பள்ளம் அமைக்கப்பட்டது. சுமார் 27 அடிக்கு மேல் குழி தோண்டப்பட்டது. அதேநேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ெதாடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.