அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நடன ஆசிரியர் வேணுகோபால்(41). இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். கடந்த 14ம் தேதி முகப்பேர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, பள்ளி வளாகத்தில் நடன பயிற்சி செய்துகொண்டு இருந்தபோது பாத்ரூமுக்கு சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பள்ளிக்கு வந்து நடன ஆசிரியர் வேணுகோபாலை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் நொளம்பூர் போலீசார் வந்து நடன ஆசிரியரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களால் வேணுகோபால் தாக்கப்படலாம் என்பதால் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுசம்பந்தமாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் இரண்டு போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு வேணுகோபாலை கைது செய்தனர். இந்த நிலையில், இன்று காலை சென்னை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று வேணுகோபாலிடம் விசாரணை நடத்தினர். சிறுமி மற்றும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.