திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மனைவி உண்டு. ஆனால் குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் இரு வருடங்களுக்கு முன் இவர் பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை தத்து எடுத்தார். அந்த சிறுமியை அவர் தன் வீட்டில் வளர்த்து வந்தார்.முதலில் சிறுமியை நன்றாக பார்த்துக்கொண்ட தாமஸ் சாமுவேல் ஒருகட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த குழந்தை இல்லாத வேறொரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் அந்த சிறுமி, தாமஸ் சாமுவேல் தன்னை பலாத்காரம் செய்த விவரத்தை கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாமஸ் சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாமஸ் சாமுவேலுக்கு 109 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹6.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.