சென்னை: சென்னை, சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டது. சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமை வகித்தார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை மக்களுக்கு எடுத்தும் செல்லும் வகையில் களப்பணி ஆற்றுகின்ற சமூக விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களுக்கு (சின்னம் அச்சிட்ட) ஒவர் கோட் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில், 6,261 அரசு பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் தன்னார்வலராக 5 பேரை தேர்ந்தெடுத்து, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.