நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மாமல்லபுரத்துக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 3 பேர் கைதாகி உள்ளனர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த பினு, அவருக்கு உடந்தையாக இருந்த பொன்னுலிங்கம், ராஜலட்சுமி தம்பதி கைது செய்யப்பட்டனர்.