திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிவலபாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கிரிவலப்பாதையில் அனுமதியில்லாமல் 1935 கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
கிரிவலப்பாதை சட்டவிரோத கட்டிடங்கள் -அறிக்கை தர ஐகோர்ட் ஆணை
0