கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழா வரும் 24ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. மேலும் முதன்முறையாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ராட்சத காற்றாடி திருவிழா மன்னவனூர் ஏரி பகுதியில் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இத்திருவிழா பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கையை பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களுடன் நடத்தப்பட உள்ளது. திருவிழாவை காண சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக காற்றாடி திருவிழா கொடைக்கானலில் நடைபெறுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.