தேவையானப் பொருட்கள்
வடித்த சாதம் – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொழுந்து முருங்கைக் கீரை – சிறிது
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
முந்திரி – 10
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், நறுக்கிய பூண்டு போட்டு வதக்கி, கொழுந்து முருங்கை இலைகளை போட்டு பொரிக்கவும். பிறகு முந்திரி போட்டு வதக்கி வடித்த சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான நெய் சோறு தயார்