துவரம் பருப்பு- கால் கப்
கடலைப்பருப்பு -கால் கப்
புழுங்கல் அரிசி- கால் கப்
பச்சரிசி -கால் கப்
கோதுமை ரவை -கால் கப்
வற்றல் மிளகாய் -4
2 -நறுக்கிய வெங்காயம்
கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு
உப்பு, நெய்- தேவைக்கு ஏற்ப
சோம்பு, சீரகம் தலா -அரை டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பு, கடலை பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி நான்கையும் ஊறவிட்டு கெட்டியாக கொரகொரவென்று வற்றல் மிளகாய், சோம்பு, சீரகம், அனைத்தையும் சேர்த்து அரை க்கவும். அதனுடன் கோதுமை ரவையை இரண்டு சுற்று சுற்றி கருவேப்பிலையும் ஒரு சுற்று சுற்றி எடுத்து உப்பு, வெங்காயத்தை அந்த மாவில் கலந்து நன்றாக பிசைந்து விடவும்.பின்னர் தோசை கல்லை அடுப்பில் போட்டு தேவையான அளவு மாவை எடுத்து கையாலே தட்டி தோசை கல்லில் போட்டு நெய் விட்டு மொறு மொறுவென சுட்டு எடுக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும்.