சென்னை: கானா மற்றும் திரைப்படப் பாடகி இசைவாணி ‘‘ஐ யாம் சாரி ஐயப்பா’’ என்ற பாடலை பாடியிருந்தார். இதையடுத்து, சமூக வலைதளம் மற்றும் தொலைபேசி மூலமாக பாடகி இசைவாணியை தொடர்பு கொண்டு ஜாதி பெயரைச் சொல்லி பாலினம் ரீதியாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து இசைவாணி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, எஸ்சி, எஸ்டி ஆக்ட் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பாடகி க்கு மிரட்டல் விடுத்த வந்தவாசியை சேர்ந்த பாஜ முன்னாள் நிர்வாகி ரவிச்சந்திரன் (44) பொழிச்சலூரை சேர்ந்த சதீஷ்குமார் (64), சேலத்தை சேர்ந்த அழகு பிரகஸ்பதி (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.