பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் டி.வி.கே லிங்க் சாலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மேடை மற்றும் பேனர்கள், கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக கொடுங்கையூர் போலீசார், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா, இணை செயலாளர் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் பொதுக்கூட்டம் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
0