சென்னை: மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழாவின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. தனித்துவமான வேலைப்பாடுகள் மற்றும் காலத்தால் அழியாத நகைகளின் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கத்தில் ஜெம்ஸ்டோன்கள், அன்கட் வைரங்கள் மற்றும் போல்கி நகைகளை கொண்டு அழகூட்டப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் நகைகளைப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமத் கூறுகையில், ‘‘ஜெம்ஸ்டோன் விழாவையொட்டி வாடிக்கையாளர்கள் ஜெம்ஸ்டோன்கள் மற்றும் அன்கட் வைர நகைகளின் சேதாரத்தில் 25% தள்ளுபடியையும், போல்கி நகைகளின் கல் மதிப்பில் 25% தள்ளுபடியையும் பெற முடியும். இந்த தனித்துவமான சலுகைகள் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்பின் சங்கமமாக விளங்கும் பிரபலமான எரா, பிரசியா மற்றும் விராஸ் கலெக்சன்களுக்கு கிடைக்கும்.
கூடுதலாக, மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் பழைய தங்க நகைகளைக் கொடுக்கும் போது எவ்விதத் தடையும் இல்லாமல் பலனளிக்கும் ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்ய கேரண்ட்டி பைபேக்குடன், 0% கழிவையும் அளிக்கிறது. இச்சலுகைகள் செப்டம்பர் 15 வரை செல்லுபடியாகும். முன்பணமாக 10% செலுத்தி தாங்கள் விரும்பும் ஆபரணங்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தாங்கள் முன்பதிவு செய்த விலையிலோ அல்லது நடப்பு விலையிலோ இவற்றில் எது குறைந்ததோ அந்த விலையில் அவர்கள் வாங்குவதை இவ்வாறு உறுதி செய்யலாம்,’’ என்றார்.