காசா: காசா மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் கடந்த 48 மணிநேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்- காசா இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். என்ற போதிலும் இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்றிரவு காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் கடந்த 48 மணிநேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் இருந்து இஸ்ரேல் குண்டு வீசியதிலும் துப்பாக்கியால் சுட்டதிலும் 73 பாலஸ்தீனர்களும், அமெரிக்கா ஆதரவுடன் சில அமைப்புகள் வழங்கும் உணவுப்பொருளை வாங்கச் சென்ற சிறுவர்கள் 33 பேரும் பலியாகியுள்ளனர். பள்ளியில் தங்கியிருந்த மக்கள் 16 பேரையும் நிவாரண முகாமில் இருந்த 13 பேரையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. காசா மருத்துவமனை இயக்குநரை குடும்பத்துடன் இஸ்ரேல் கொன்றுவிட்டதாக காசா அரசு செய்தித்துறை தகவல் தெரிவித்துள்ளது.