ஐநா: காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ஐநா பொதுசபை ஏற்று கொண்டுள்ளது. காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடந்த தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் உள்ள 193 உறுப்பு நாடுகளில் இந்தியா உள்பட 158 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேல், அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன.13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்துக்கு ஐநா பொது சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐநா பொது சபையின் தீர்மானம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவதில்லை என்றாலும் அது உலக நாடுகளின் கருத்தை பிரதிபலிக்கிறது.