பாலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்களும் காசா முனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளிக்கும்.













