இஸ்ரேல்: காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். அணுசக்தி ஒப்பந்த விவரத்தில் ஈரான் மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு அந்நாடு பலமான பதிலடி கொடுத்தது. இஸ்ரேலுக்கு உதவியாக அணு சக்தி மையங்கள் மீது குண்டுகளை வீசிய அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தாரில் தலைநகர் தோஹா அருகே உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதை தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் அதை இஸ்ரேல் மதித்து நடப்பது சந்தேகம் தான் என ஈரான் ஆயுத படைகளின் தலைமை தளபதி அப்துல் ரஹீம் மெளசவி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின்அணுசக்தி மையங்களை முற்றாக அழித்ததாக அமெரிக்கா கூறி வந்தாலும் சில மாதங்களிலேயே ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்கும் என்று சர்வதேச அணுசக்தி முகைமையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. காசாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக டிராப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் அகதி முகம் மீது நடத்திய விமான தாக்குதலில் 5பேர் பலியாகினர்.
ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காசாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததை அடுத்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி வருகின்றனர். காசா போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்ததும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதும், தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் தெரிவிக்கின்றனர். ஹமாஸ் இயக்கத்தினரிடம் எஞ்சியுள்ள 50 பிணை கைதிகளை மீட்பதே இப்போதைய முக்கிய குறிக்கோள் என கூறியுள்ள நெதன்யாகு, ஊழல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.