சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, தொடர்ந்து 6வது மாதமாக மாற்றம் செய்யப்படவில்லை. அதே வேளையில், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1,695 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதம் தோறும் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி இம்மாதத்திற்கான புதிய விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு இன்று அதிகாலை அறிவித்தது. அதில், தொடர்ந்து 6வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனிடையே அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1,118.50க்கு விற்கப்பட்ட வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து இம்மாதம் ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,852.50க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1,894ல் இருந்து ரூ.157.50 குறைந்து ரூ.1,695 ஆக விற்பனை செய்யப்படுகிறது.