பிரட் – 8 துண்டுகள்,
வெண்ணை – 2 மேசைக்கரண்டி,
பூண்டு – 1/2 டீஸ்பூன்,
சில்லி பிளேக்ஸ் – அலங்கரிக்க.
செய்முறை:
பிரட்டினை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெண்ணையை நன்கு அடித்துக் கொள்ளவும். பூண்டினை நன்கு மைய இடித்துக் கொள்ளவும். இடிச்ச பூண்டினை வெண்ணையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் முட்டை அடிக்கும் பீட்டர் கொண்டு இரண்டும் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளலாம். பிறகு வெண்ணை மற்றும் பூண்டு கலவையினை பிரட்டின் ஒரு பக்கம் மட்டும் நன்கு தடவிக் கொள்ளலாம். தோசைக்கல்லில் பூண்டு மற்றும் வெண்ணைக் கலவை தடவிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்யலாம். மைக்ரோ அவன் பயன்படுத்த விரும்பினால் அதில் 200 டிகிரியில் பிரீ ஹீட் செய்துவிட்டு பிரட் துண்டுகளை அதில் வைத்து 5 நிமிடம் பேக் செய்யலாம். பரிமாறும் போது மேல் சில்லி பிளேக்ஸ் தூவி பரிமாறலாம்.