பந்தலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட நெலாக்கோட்டை சோலாடி அருகே தனியார் தேயிலைத்தோட்டத்தில் மண்சாலையில் பெண் புலியும் அதன் அருகே தேயிலைத்தோட்டத்தில் ஆண் குட்டிப்புலியும் இறந்து கிடப்பதாக தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கூடலூர் வனகோட்ட அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் இறந்து கிடந்தது தாய் புலியும், குட்டிப்புலியும் என தெரிவித்தனர். மேலும், புலி இயற்கையாக இறந்ததா? அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை நடக்கிறது.