செங்கல்பட்டு: தொழுப்பேட்டில் கடந்த வாரம் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு உரிமை கோருவோர், அதற்கான தக்க சான்றிதழ்களை வழங்கி குழந்தையை வாங்கி செல்லாம் என குழந்தைகள் நல குழு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொழுப்பேடு சுங்கசாவடி அருகே குப்பைகள் நிறைந்த பகுதியில் இருந்து 15.5.2024 அன்று பிறந்து 3 மணி நேரமே ஆன கைவிடப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு அச்சிறுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், குழந்தைகள் நல குழுவின் ஆணையின்பேரில், குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த பெண் குழந்தையை குறித்து உரிமை கோர விரும்புவோர் செய்திதாளில் அறிவிப்பு வெளி வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தக்க சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளலாம் என குழந்தைகள் நல குழு தெரிவித்துள்ளது. எனவே, விவரங்கள் தேவைப்படுவோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 6, தரை தளம், புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு என்ற முகவரியிலும், 63826 13182 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், குழந்தைகள் நலக்குழு, அரசினர் சிறப்பு இல்ல வளாகம், ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு என்ற முகவரிலும், 98406 76135 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர் கொள்ளாலம்.