சென்னை: செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திடமாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 22 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நல்ல மாணார் கோட்டை பழனியை சேர்ந்த கார்த்திக்(30), விக்னேஸ்வரன்(28) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.