தேனி:பெண் போலீசார் குறித்து அவதூறாக யூடியூப் சேனலில் பதிவிட்டது சம்பந்தமாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே 3ம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் யூடியூபர் சங்கர் கைதானார். பின்னர் அவரது கார் டிரைவரான பரமக்குடி ராம்பிரபு (22), நண்பர் சென்னை நுங்கம்பாக்கம் ராஜரத்தினம் (43) ஆகியோர் தங்கியிருந்த அறையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 3 பேர் மீதும் பழனி செட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கஞ்சா சப்ளை செய்த பரமக்குடி மகேந்திரன் (24), பாலமுருகனையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில் தேனி எஸ்பி சிவபிரசாத் பரிந்துரைப்படி யூடியூபர் சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்படி அவர் நேற்று மாலை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.