சென்னை: குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குண்டர்சட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இரு தரப்பிற்கு இடையே பணப்பரிமாற்றம் தொடர்பான பிரச்சனை. தனிப்பட்ட நபர்களின் பிரச்சனைகாக காவல்துறை செல்வராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கும் பொழுது மனுதாரர் உதவியுடன் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டதாகவும், போலி ஊதிய சான்று தயாரித்து கொடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் ரூ.3 கோடியே 30 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளது.
அனைத்துமே மனுதாரரின் உதவியோடு நடந்துள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதாக தெரிவித்தனர். ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அனைத்தும் தனிநபர் குற்றம் என்பதால் தனிநபர் குற்றத்தை காரணமாக வைத்து குண்டர் சட்டம் போட முடியாது என்றும் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக கூறிய நீதிபதிகள். யார் குண்டர் என்பதை அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
குண்டர் சட்டத்தை தேவை இல்லாமல் சாதாரணமாக பயன்படுத்த கூடாது என்றும் நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர். சட்டவிரோதமாக ஒருநாள் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் அது சட்ட விரோதம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய நடைமுறையை சரியாக பின்பற்ற வேண்டும் என காவல்துறை தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.