நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சங்கர், மாரியப்பன் ஆகியோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.