*பிளாஸ்ட்டோ பாரிஸ் சிலைகளுக்கு தடை
சித்தூர் : வருகிற 18ம் தேதி விநாயகர் துர்த்தியையொட்டி சித்தூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைெபற்று வருகிறது. இந்த சிலைகள் ₹500 முதல் ₹25 ஆயிரம் வரை விற்பனை ெசய்யப்படுகிறது. இதில் பிளாஸ்ட்டோ பாரிஸ் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சித்தூர் மாநகரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்கள் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை தங்கள் வீடுகள், தெருக்களில் வைத்து சிறப்பு பூைஜகள் செய்து வழிபடுவார்கள்.
மேலும், 3 முதல் 9 நாட்களை வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அன்னதானம், நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து விநாயகருக்கு மலர்களால் அவங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அதன்படி, வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சித்தூர் அடுத்த துமிந்த பாளையம் கிராமத்தில் சிலைகளை விதவிதமான வடிவங்களில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு அடி முதல் 25 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, ஈஸ்வரர், மூஷிக தாமரை, சங்கு முருகர், யானை, சிங்கம், 5 தலை பாம்பு, கங்கா, தேவி உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இவை ₹500 முதல் ₹25 ஆயிரம் விற்கப்படுகிறது.அதேபோல் மாநகராட்சி சார்பில் பிளாஸ்ட்டோ பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு யாராவது விநாயகர் சிலைகளை தயாரித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.