கந்தர்வகோட்டை, ஜூலை 27: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தமிழக முதல்வர் உத்தரவின்படி அனைத்து தகுதியான குடும்பத் தலைவிகளும் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க விண்ணப்பம் இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள் மூலம் அனைத்து மையங்களிலும் பெறப்படுகிறது. பொதுமக்கள் கொடுக்கின்ற விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை சரி செய்து கொண்டு முறையாக பதிவு செய்யபட்டு வருகிறார்கள். இந்த நிலையில பெரும்பாலான கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணி நடைபெறுவதால், அந்தப் பணிக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பத்தில் கொடுத்து உள்ள நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் காலம் தாமதம் ஆகிறது. ஆகையால் விண்ணப்பம் பெறும் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அல்லது விண்ணப்பம் பதிவு செய்ய சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்கள். தொழில் நுட்பங்களை கடைபிடித்து