காபோன் : மத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் அதிபராக 64 வயதான அலி போங்கோ இருந்து வந்தார். இங்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் அலி போங்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3வது முறையாக அலி போங்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிபர் தேர்தலில் அதிபர் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று ராணுவம் அறிவித்தது. மேலும் காபோன் நாட்டில் புரட்சியில் இறங்கிய ராணுவம், ஆட்சி அதிகாரத்தையும் கைபற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்து ராணுவ தளபதியை அதிபராக அங்கீகரித்து ராணுவ வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காபோன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம், அதிபர் அதிபர் அலி போங்கோவை வீட்டு சிறையில் வைத்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு காபோன் நாட்டில் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் அலி போங்கோவின் தந்தை ஒமர் போங்கோ 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காபோன் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அவரது மறைவிற்கு பின்னர் போங்கோ அதிபராக பதவியேற்றார்.