டெல்லி: ஜி20 மாநாடு தீர்மானம் ஒப்புதலையடுத்து பசுமை எரிபொருள் கூட்டமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கூட்டமைப்பு மூலம் வளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப பகிர்வு மற்றும் வர்த்தக சந்தை உள்ளிட்டவற்றில் நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.