புதுச்சேரி: ஜி20 மாநாட்டை ஒட்டி ஜனாதிபதி அளிக்கும் விருந்துக்கு கார்கேவை அழைக்காதது தவறு என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களை அழைக்கும்போது மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்காதது தவறு. காங்கிரஸ் தலைவரை ஒதுக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியை அழைக்காமல் பாஜக அரசு அரசியல் செய்கிறது என நாராயணசாமி கூறியுள்ளார். இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஜி20 மாநாட்டை ஒட்டி ஜனாதிபதி அளிக்கும் விருந்துக்கு கார்கேவை அழைக்காதது தவறு: நாராயணசாமி கண்டனம்
164