Sunday, April 21, 2024
Home » கடலூரில் நள்ளிரவில் பியூஸ் கேரியர்கள் திருட்டு; சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்: ரோந்து பணியை தீவிர படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்!

கடலூரில் நள்ளிரவில் பியூஸ் கேரியர்கள் திருட்டு; சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்: ரோந்து பணியை தீவிர படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்!

by Francis
Published: Last Updated on

கடலூர்: கடலூரில் காப்பர் ஒயர்களுக்காக பியூஸ் கேரியர்களை திருடும் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மின்சார ஒயர்கள் அருந்து கீழே விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, தற்போது தமிழக முழுவதும் தரை வழியாக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடலூரிலும் அந்த பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. தரை வழியாக மின் இணைப்பு கொடுக்கும் போது வீடுகளில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளை சரிசெய்ய ஆங்காங்கே சிறிய அளவிலான மின் மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளது.

மின்சார ஊழியர்கள் எளிதாக சரி செய்வதற்கு வசதியாக கைக்கு எட்டும் தூரத்திலேயே இந்த மின் மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மின்மாற்றியில் உள்ள பியூஸ் கேரியர்களில் காப்பர் ஒயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காப்பர் ஒயர்கள் மிகவும் விலை உயர்ந்தவை. தற்போது கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காப்பர் ஒயர்களுக்காக அந்த பியூஸ் கேரியர்களை நள்ளிரவு நேரங்களில் திருடர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் மின்சார தடை ஏற்பட்டு வருகிறது.

தூக்கத்தை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர் . மஞ்சக்குப்பம் பிரண்ட்ஸ் நகர், வள்ளலார் நகர், உள்ளிட்ட ஏழு இடங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் ஒரே நாளில் நடைபெற்று உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. எனவே மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காவல் துறையில் புகார் அளித்து திருடர்கள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை அதிகரித்து இதுபோன்ற செயல்களை நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும், மேலும் கைக்கு எட்டும் தூரத்திலேயே இந்த மின்மாற்றிகள் உள்ளதால் அந்த மின்மாற்றுகளுக்கு பாதுகாப்பான பூட்டு போட்டு திறக்க முடியாத அளவிற்கு வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

sixteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi