மதுரை: கீரனூரில் இறுதி ஊர்வலத்தின்போது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர் உடலை தூக்கிச் சென்ற இளையராஜா (35) மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்னல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தவர்கள் மதுரை மற்றும் திருப்புவனம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.