பல்லாவரம்: குன்றத்தூர் அருகே எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரிசாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எண்ணூரில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் டேங்கர் லாரி ஒன்று நேற்று குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த ஓட்டுநர் சூர்யா (30) என்பவர் ஓட்டி வந்தார். குன்றத்தூர் பெரும்புதூர் பிரதான சாலை சிறுகளத்தூர் அருகே சென்றபோதுடேங்கர் லாரியின் பின்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால்ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல்டீசல் கசிய தொடங்கியது. இதனைக்கண்டுஅதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் லாரியில் சிக்கிய ஓட்டுநர் சூர்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்பூந்தமல்லி மற்றும் பெரும்புதூர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள்தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராட்சத கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
0