புதுடெல்லி,: அதானி டோட்டல் காஸ் நிறுவனம் வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகளுக்கான சிஎன்ஜியை விற்பனை செய்கிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்களிப்பு இதற்கு உண்டு. இதுபோல், அம்பானியின் ஜியோ-பிபி பங்க்குகள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அதானி டோட்டல் பங்க்குகளில் ஜியோ – பிபி பெட்ரோல், டீசலையும், ஜியோ – பிபி பங்க்குகளில் டோட்டல் காஸ் விற்பனை செய்யவும் அதானி – அம்பானி நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, இரு நிறுவனங்களும் நேற்று கூட்டாக அறிவித்தன. நாடு முழுவதும் ஜியோ – பிபிக்கு 2,000 பங்க்குகளும், அதானி டோட்டலுக்கு 650 பங்க்குகளும் உள்ளன.