சன் ப்ளவர் ஆயில்- 200 மில்லி
நெய்-100 மில்லி
கேசரி பவுடர் -1 சிட்டிகை (தேவையானால்)
வறுக்காத ரவை-250 கிராம்
சீனி -500 கிராம்
முந்திரி-100 கிராம்
உலர்ந்த திராட்சை- 100 கிராம்
செரிப்பழம் -100 கிராம்
ஏலக்காய் பொடி -1 ஸ்பூன்
கனிக்குழை(Tutti fruity) -100 கிராம்
தண்ணீர்-750 மில்லி
செய்முறை:
முதலில் 750 மில்லி தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் தனியாக ஒரு பாத்திரம் வைத்து சிறு தீயில் இருக்கும்போது அதில் எண்ணெய் ஊற்றி, உடனடியாக ரவையைப் போட்டு, பின் திராட்சை போட்டு வறுக்க வேண்டும். திராட்சை உப்பி வரும்வரை வறுக்கவும். பின் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் அதனுடன் சேர்த்து இத்துடன் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். ரவை தண்ணீரை இழுத்து வெந்து சுருண்டு வரும் நேரத்தில் சீனியைப்போட்டு கொள்ளலாம். தீயை சிறிது கூட்டி சீனி சிறிது இளகி வரும் போது ஏலக்காய்த்தூள் போட்டு இறுகி வரும்வரை கிளறி கொடுக்கவும்.இறுதியில் நெய்யை ஊற்றி கிளறவும்போதே கேசரி வாசனை மூக்கை துளைக்கும். கையில் தொட்டு பார்க்கும் போது ரவை கையில் ஒட்டாத நிலை வரும்போது இறக்கி வைத்துவிட்டு செரிப்பழம், முந்திரி, Tutti fruity, ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி பவுலின் எடுத்து பரிமாறலாம். மிகவும் சுவையான, ப்ரூட் கேசரி தயார்.