தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 2 கப்
இட்லிப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து கறிவேப்பிலையை போட்டு, சிறிது உப்பை தூவி, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லிப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது அருமையான ஃப்ரைடு இட்லி ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம்.