தேவையானவை:
முருங்கைக்காய் – 4,
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்,
மிளகு – ½ டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4,
பாசிப்பருப்பு – 1 கப்,
கடுகு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு, மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்.
செய்முறை:
முருங்கைக்காயை விரல் நீளத்திற்கு வெட்டி வைக்கவும். பாசிப்பருப்பை குழைய வேகவிடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் வறுத்து ஆறவிட்டு தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்ட பருப்பில் கொட்டி முருங்கையை சேர்த்து கொதித்ததும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி நன்றாக வெந்ததும் இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, ேதாசைக்கு தொட்டுக் கொள்ளவும் சைட்டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.