சென்னை: அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் வெளியிட்ட அறிக்கை: வார இறுதியை முன்னிட்டு 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் பொது மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர். வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.