புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு விதவிதமான கெட்அப்பில் நகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திரா நகர் தொகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்பு, அன்னதானம் மட்டுமின்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுகின்றனர்.
புதுச்சேரி நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புற சாலைகளையும் கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பத்துதல எஸ்டிஆர் முதல் சந்திரமுகி, வேட்டையன் வரை அவதாரங்கள் எடுக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் விதவிதமான படங்களுடன் பேனர்களை காணமுடிகிறது. இவற்றை வாகன ஓட்டிகள் வியப்புடன், சிரிப்புடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
முதல்வர் ரங்கசாமியை வாழ்த்தியும், அவரை பெருமைப்படுத்தும் வகையிலும் அவரது பிறந்தநாளையொட்டி விதவிதமான கெட்அப்களில் அவரது கட்சியினர், தொண்டர்கள் வைத்துள்ள பேனர்கள் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.