சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது கவலை அளிக்கிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பதற்கு சில வழிவகைகளை முனைந்து செயல்படுத்த வேண்டும். வரைவு விதிகளின் மீது பொதுமக்கள், வல்லுநர்களின் கருத்துகளை கேட்டு இறுதி விதிகளை வகுக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளை தளர்த்தாமல் கண்டிப்பாக செயல்படுத்த அதிகாரிகளை தேர்வுசெய்து சிறப்பு பயிற்சி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.