அண்ணாநகர்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து தன்னிடம் வேலை பார்த்த ஐடி பெண்ணிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்த வாலிபரை கைது செய்தனர். தனது செயல்களை வீடியோ எடுத்துவைத்து மிரட்டி மீண்டும், மீண்டும் மிரட்டி ஜாலியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண், நேற்றுமுன்தினம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறேன். தன்னுடன் பணியாற்றும் அஜித்(31) என்பவர் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் காதலிப்பதாகவும் கூறினார். இதனால் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம். திடீரென ஒருநாள் தன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் உறவினர்களை அழைத்துவந்து பெண் கேட்பதாகவும் கூறினார்.
இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஜாலியாக இருந்தார். பின்னர் எனக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்ததுடன் வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு என்னிடம் காண்பித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அந்த வீடியோவை அழித்துவிடுங்கள் என்று கெஞ்சியபோதும் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் அஜித்துக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது என்று தெரியவந்தது. இதன்பிறகு அந்த வீடியோக்களை காண்பித்து அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறார். சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறேன். இதனால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே முதல் திருமணத்தை மறைத்து என்னிடம் தவறாக நடந்துகொண்ட அஜித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரித்து அஜித்தை நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில் தனது முதல் திருமணத்தை மறைத்து ஐடி பெண்ணை 2வது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியதும் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து உல்லாசமாக இருந்ததும் வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டியதும் உண்மை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.