புவனேஷ்வர்: ஒடிசாவில் கட்டாக் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நேற்று காலை தடம் புரண்டது. ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் யார்டில் லூப் லைன் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்ராக் -கட்டாக் -விசாகப்பட்டினம் பிரதான தடம் செயல்படுவதாகவும் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு ரயில் தடம் புரண்டது
0