புதுடெல்லி: துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மகாதேவ் ஆன்லைன் புக் செயலி, ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களுக்கு பதிவு செய்ய அழைப்பு விடுத்து பினாமி வங்கி கணக்குகளின் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கொல்கத்தா, போபால், மும்பை உள்ளிட்ட நகரங்களில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.417 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.