சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்-ஒப்புதல் வழங்குக
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவே ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார். சுதந்திர போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால் ஒப்புதல் அளிக்க வேண்டும். சங்கரய்யாவின் வரலாற்றை ஆளுநர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று மதுரை பல்கலை. சிண்டிகேட் மற்றும் ஆட்சிமன்ற குழு முடிவு செய்துள்ளதாகவும் மதுரையில் நவம்பர் 2ம் தேதி காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.