திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்களை திறப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் த.பிரபுசங்கர் எச்சரித்துள்ளார்.