சென்னை: ஜெய்சுயா அறிவு சார் கல்வியகம் மற்றும் தென்னிந்தியா ஆய்வு மையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரைந்த அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி என்ற தலைப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி வியாசர்பாடி தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றிருந்தன.