சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திரப் போராட்ட தியாகி கடலூர் அஞ்சலை அம்மாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தியாகி ஜோதி என்.கண்ணன் தலைமை தாங்கினார். கதர் வி.வெங்கடேசன், இ.வெங்கடேச சாய், பி.ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர்கள் மு.பன்னீர் செல்வம், வழக்கறிஞர் பி.தாமோதரன், தளபதி எஸ்.பாஸ்கர், மண்டல பொறுப்பாளர் டி.என். அசோகன், ஆர்.ஏ.ஆர். கண்ணன் சத்திரியர், அடையாறு ரவிக்குமார், தியாகிகளின் வாரிசுகள் கே.பொன்னம்பலம், தியாகி வரதன், இருசா கவுண்டர், தியாகி பெருமாள், எஸ்.கே.அன்பழகன், பண்ருட்டி நிசார் அஹமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டன.