மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாம்பாஜிநகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி பேசியதாவது: மக்களவை தேர்தலில் துலேயில் பா.ஜ வேட்பாளர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து தோல்விக்கு லவ் ஜிகாத்தான் காரணம் என்று துணை முதல்வர் பட்நவிஸ் கூறிவருகிறார். நாங்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து ஜிகாத் (புனித போர்) நடத்தினோம். ஆனால் பட்நவிசின் முன்னோர் ஆங்கிலேயர்களுக்கு காதல் கடிதம் எழுதினார்கள். இப்போது புனித போருக்கு பதில் தர்மயுத்த ஜிகாத் என்று கூறிவருகிறார்கள்.
இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் அது அவர்களுக்கு பாதுகாப்பு என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். இதன் மூலம் நாட்டின் பன்முக தன்மையை பிரதமர் அழிக்க முயற்சிக்கிறார். இவ்வாறு ஓவைசி பேசினார்.