புதுடெல்லி, ஆக.16: மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இது குறித்து ராகுல் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களின் வேரூன்றிய நமது மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாகும். இது தான் வெளிப்படுத்தும் சக்தி, உண்மையை பேசும் திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றக்கூடிய நம்பிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.