மதுராந்தகம்: இந்து சமய அறநிலைத் துறை சார்பில், ஆட்சீஸ்வரர் கோயிலில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை சுந்தர் எம்எல்ஏ நடத்தி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் திருமணம் செய்து கொள்ள மகேஷ்-மகேஸ்வரி தொழுப்பேடு, கிரிராஜன்-புஷ்பா சிறுகடம்பூர், குமார்-அம்சா திண்டிவனம் ஆகிய மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தகுதியான மணமக்கள் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் தமிழரசி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கோகுலக்கண்ணன் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவாச்சாரியார் சங்கர் அனைவரும் வரவேற்றார். இதில், இந்து சமய அறநிலைதுறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடி காரம், தங்கத் தாலி, ஆகியவற்றை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்து கொண்ட இரு ஜோடிகளுக்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தருமன், பொதுக்குழு உறுப்பினர் உசேன், நிர்வாகிகள் பாஸ்கர், யுவராஜ், சுரேஷ், கபாலி, சிவசங்கரன், ஆனந்தக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.இதேபோல், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இதில், கோயில் நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் திருமண சீர்வரிசை வழங்கி வாழ்த்தினர்.
காஞ்சிபுரம்: தமிழ்நாடு இந்து சமய அறைநிலைத்துறை சார்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. இதில், திருமண ஜோடிகளுக்கு அரசு வழங்கக்கூடிய, சீர்வரிசைகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ், இணை ஆணையர் குமரதுரை, மாவட்ட அறங்காவல் துறை தலைவர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர். இதில், உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் கேசவன், முத்துலட்சுமி, பூவழகி, அமுதா ஆய்வாளர்கள் அலமேலு, பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.