பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு உட்பட்ட பெரும்பேடு அரசினர் மேல் நிலை பள்ளியில் 86 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா தனஞ்செழியன், கம்மார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்செல்வி பார்த்திபன், ஏறுசிவன் ஊராட்சி தலைவர் வெங்கட் கிருஷ்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மைதிலி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மேகலா, நேதாஜி சௌரிராஜன் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.